செய்திகள் உண்மை உடனுக்குடன்

நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவனா? சத்யராஜ் விளக்கம்

நான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் இல்லை என்றும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்க வேண்டும் என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

ஒன்பது வருடங்களுக்கு முன் காவிரி நதி பிரச்னையின் போது கர்நாடகாவில், தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ்ப் படங்கள் திரையிடுவதை நிறுத்த சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலரும் ஆவேசமாகப் பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன். அதற்கு எதிர்வினையாக என் கொடும்பாவிகள், உருவபொம்மைகள் கர்நாடகாவில் எரிக்கப்பட்டன. அதே வேளையில் கர்நாடகாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக திரைப்பட கலைஞர்களும் ஆவேசமாகப் பேசினார்கள். அப்படி நான் பேசிய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே 35 வருடங்களாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி, கன்னடம்.

கடந்த 9 வருடங்களில் பாகுபலி பாகம் ஒன்று உட்பட நான் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. எந்த பிரச்னையும் எழவில்லை. சில கன்னடப் படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை. ஒன்பது வருடங்களுக்கு முன்னால் நான் பேசிய அந்த வார்த்தைக்காக கன்னட மக்களிடம் மனப்பூர்வமாக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழீழ உறவுகளுக்கும் தமிழக மக்களுக்கும் என் நலம் விரும்புவர்களுக்கும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு, சொற்களின் பொருட்டு, பல ஆயிரம் பேர்களின் உழைப்பும் பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது கர்நாடக மாநிலத்திற்கு பாகுபலி 2 படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது, இன்றைய டிவிட்டர் பதிவில் ராஜமவுலி கூறிய விளக்கத்தின் மூலமாகத் தெளிவாகத்தெரியும்.

ஆனாலும் இனி வரும் காலங்களில் தமீழீழ மக்களின் பிரச்னையாக இருந்தாலும் சரி, காவிரி நதி நீர் பிரச்னையாக இருந்தாலும் சரி, விவசாயிகளின் பிரச்னையாக இருந்தாலும் சரி, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்னைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன் என்பதைத் தெள்ள தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.

இப்படி கூறுவதால், இந்த சத்யராஜை வைத்து படமெடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதராண, சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம், என்னால் நஷ்டமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட, எந்த வித மூட நம்பிக்கையும் இல்லாத, ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும்தான் எனக்குப் பெருமை, மகிழ்ச்சி.

எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட தொல்லைகளைப் பொறுத்துக்கொண்ட இயக்குனர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் ஷோபு, பிரசாத் மற்றும் பாகுபலி படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு சத்யராஜ் கூறியுள்ளார்.

முக்கியச் செய்தி
Hockey fb
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் சமன்
Ec l
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு
Accident 700 x 350
நடந்தது விபத்தா? படுகொலையா?: சயானிடம் விசாரணை தீவிரம்
Dhoni fb
ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூருவை பந்தாடியது புனே
Farmer  it 700 x 350
இந்திய வளத்தில் பாதிக்கு மேல் ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே சொந்தம்..!
Boat l
தமிழக மீனவர்களின் 20 படகுகளை விடுவிக்க இலங்கை முடிவு
Sand l
தமிழகத்தில் 9 மணல் குவாரிகள் திடீர் மூடல்
Kodanad 700 x 350 - 1
200 கோடியை கொள்ளையடிக்க முயற்சி?: கொடநாடு கொலையில் திடுக்கிடும் தகவல்
Farmers dead l
விவசாயிகள் உயிரிழப்பு: உண்மை என்ன?
North korea missile
வடகொரியா நெருப்புடன் விளையாடுகிறது: தென்கொரியா எச்சரிக்கை
முக்கிய செய்திகள்