செய்திகள் உண்மை உடனுக்குடன்

பாகுபலி-3 வருமா..? கைவிரிக்கும் தயாரிப்பாளர்

இதுவரை எந்த இந்திய திரைப்படமும் புரியாத சாதனையை புரிந்துள்ளது பாகுபலி 2 திரைப்படம். ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளித்திரைகளை எட்டிய பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரத்து 502 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பாக அமீர்கானின் டங்கல் திரைப்படம்தான் உலகம் முழுவதும் 1200 கோடி வசூல் சாதனை படைத்து முதல் இடத்தில் இருந்தது.

இந்த படத்திற்கு‌ பிரபாசுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷனை தான் கதாநாயகனாக முதலில் அணுகியதாக செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து பாகுபலி தயாரிப்பாளர் ஷோபு யரலகட்டா கூறுகையில், பிர‌பாசை தவிர வேறு யாரையுமே மனதில் கொள்ளவில்லை. பிரபாசை மனதில் கொண்டுதான் பாகுபலி கதாபாத்திரமே வடிவமைக்கப்பட்டது. பாகுபலி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் உணர்வுப்பூர்வமானதாக இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே எனக்கு பிடித்தமானவர்கள்தான் என்றாலும், தனக்கு மிகவும் பிடித்தது அமரேந்திர பாகுபலிதான். பாகுபலி 2 ன் வெற்றியால் 3 ஆம் பாகம் கொண்டுவர எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்