செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜல்லிக்கட்டிற்காக அவசரச் சட்டம் தேவை.. மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வரக் கோரி மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்தாண்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் அனில் மாதவிடம் அதிமுக எம்.பி.க்கள் இன்று நேரில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். அவசரச் சட்டம் கொண்டு வந்தால், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என குறிப்பிட்ட அதிமுக எம்.பி தம்பிதுரை, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் தமிழக மக்களின் கலாசாரம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

அப்போது, பேசிய மத்திய அமைச்சர் அனில் மாதவ், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக மத்திய அரசு காத்திருப்பதாக தெரிவித்தார். தமிழக மக்களின் கலாசாரத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் மோடியிடம் இன்று ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முக்கியச் செய்தி
Stalin
அலங்காநல்லூரில் கைது செய்த மாணவர்களை விடுவிக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் ஸ்டாலின் மனு
Alanganallur protest
கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் விடுவிப்பு: மதுரை எஸ்பி தகவல்
Students
மாணவர்களுக்கு குடிநீர் கொடுக்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை: அலங்காநல்லூர் மக்கள்
Tr
மாணவர்களுடன் இணைந்த டி.ராஜேந்தர், மயில்சாமி
Veeramani l
நடராஜன் பேச்சு : கருத்து கூற வீரமணி மறுப்பு
Alanganallur traffic
அலங்காநல்லூர், பாலமேட்டில் போக்குவரத்து நிறுத்தம்
Sasikala l
எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மரியாதை
Mk stlain l
தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி: மு.க.ஸ்டாலின்
Alanganallur
இளைஞர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்: அலங்காநல்லூர் மக்கள்
Stamp l
எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
முக்கிய செய்திகள்