செய்திகள் உண்மை உடனுக்குடன்

மோசமான விளைவுகள் வரும்.... மன்மோகன்சிங் எச்சரிக்கை

பண ‌மதிப்பு நீக்க நடவடிக்கையின் மிக மோசமான விளைவுகள் இனிமேல்தான் வரவிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற “ஜன்வேதனா” நிகழ்ச்சியில் பேசிய அவர், பண மதிப்பு நீக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறையும்‌, வேலையிழப்பு கணிசமாக அதிகரிக்கும் என்றார். நாட்டின் பொருளாதாரத்தை அழிவின் பாதைக்கு பிரதமர் மோடி இட்டுச் சென்றிருப்பதாக அவர் விமர்சித்தார். தனிநபர் வருமானம் அதிகரிப்பதாக பிரதமர் மோடி தொடர்ந்து கூறுவது வெற்று முழக்கம் மட்டுமே என்பது நிரூபணமாகியிருப்பதாக மன்மோகன்சிங் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்