செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது... உச்சநீதிமன்றம்

Sc of india l

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொங்கலுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் விரைவில் வர உள்ளதால் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். ஆனால் வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தள்ளது.

உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளதால் இந்தாண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற சாத்தியம் குறைவாகவே உள்ளது.

முக்கிய செய்திகள்