கட்டுப்பாட்டை இழந்து கடைகளில் புகுந்த லாரி: 20 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணுகுண்டா அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர கடைகளில் புகுந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மே‌ற்பட்டோ‌ர் படுகாயங்களுடன் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதியிலிருந்து காளஹஸ்தி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஏர்பேடு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது சாலையோரக் கடைகளில் புகுந்தது. ஏர்பேடு காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்திருந்த பலர் சாலையோரக் கடைகளில் அமர்ந்திருந்த நிலையில் அவர்கள் மீது லாரி மோதிய‌து. இதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பதி எஸ்.பி.ஜெயலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்