பூமியின் காந்தபுலத்தில் விரிசல்... ஊட்டி டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிப்பு

Magnetic field

பூமியின் காந்தபுலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை உதகமண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியின் மேற்பரப்பில் உள்ள காஸ்மிக் கதிர்களைக் கண்காணிக்கும் உலகின் மிகப்பெரிய ஆய்வகம் ஊட்டியில் உள்ளது. இந்த ஆய்வகத்தில் உள்ள கிரேப்ஸ்-3 மியோன் தொலைநோக்கி மூலம் பூமியின் காந்தபுலம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில், பூமியின் காந்தபுலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனைச் சுற்றியிருக்கும் ஒளிவட்டத்திலிருந்து பிரிந்து வந்த பிளாஸ்மா மேகக் கூட்டம் பூமியின்மீது மோதியதால் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 20 ஜிகாஎலெக்ட்ரான் வோல்ட் சக்தியுடன் கூடிய காஸ்மிக் கதிர்களைக் கொண்டிருந்த அந்த பிளாஸ்மா மேகக்கூட்டம், பூமியின் காந்தபுலத்தின் மீது மணிக்கு 25 லட்சம் கி.மீ. வேகத்தில் மோதியதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் பூமியின் சுற்றளவை விட 4 முதல் 11 மடங்கு அளவுக்கு காந்தபுலத்தில் சுருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இந்த மோதல் 2 மணி நேரம் நீடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பூமியைச் சுற்றி பல லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள காந்தபுலம், சூரியன் மற்றும் மற்ற கோள்களில் இருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்கள் உள்ளிட்ட கதிர்வீச்சிலிருந்து காக்கிறது. காந்தபுலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அட்சரேகையை ஒட்டியுள்ள நாடுகளில் ரேடியோ தொடர்புகள் பாதிக்கப்பட்டிருப்பதும் விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்