செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜல்லிக்கட்டு வதை அல்ல... விளையாட்டு: சத்யராஜ்

ஜல்லிக்கட்டு என்பது வதை அல்ல எனவும் விளையாட்டு என்றும் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டிற்காக சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சத்யராஜ், அவரவர் வளர்க்கும் மாடுகளுடன் அவர்களே விளையாடுவது எந்தவிதத்தில் தவறு என கேள்வி எழுப்பினார். வெறித்தனமாக ஒருவருக்கொருவரை அடித்துக் கொள்ளும் டபிள்யூடபிள்யூஎப் போன்ற போட்டிகளுக்கெல்லாம் தடை விதிக்க மாட்டார்கள் எனவும் அதில் மிகப்பெரிய சூழ்ச்சி அடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை அல்ல என்றும் அது ஒரு விளையாட்டுத்தான் என்றும் அவர் கூறினார். மிருகவதை அல்ல மனித வதைதான் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். விவசாயிகள் உயிரிழப்பு மனித வதை என்றார். மனிதக் கழிவை இன்னொரு மனிதனே அள்ளுவதை விடவா ஒரு வதை வந்துவிட முடியும் என கேள்வி எழுப்பிய நடிகர் சத்யராஜ், இது குறித்தெல்லாம் யாரும் பேசுவதில்லையே என்றார்.

முக்கிய செய்திகள்