செய்திகள் உண்மை உடனுக்குடன்

சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுக-வினர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தனர். இதனையடுத்து, சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. விதிகளுக்கு புறம்பாக, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்பிக்கள் மைத்ரேயன் தலைமையில் அதிமுகவின் 10 எம்பிக்கள், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து இந்த புகார் மனுவை அளித்திருந்தனர்.

இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக சசிகலாவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, வருகின்ற 28-ம் தேதிக்குள், சசிகலா பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பதில் தரவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

முக்கியச் செய்தி
Ops stalin fb
திடீர் விசுவாச அரசியல் ஏன்?.. ஓபிஎஸுக்கு ஸ்டாலின் கேள்வி
Modi
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மக்கள் மாறிவருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்
Thiruvananthapuram
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே தீ விபத்து: 2 பேர் காயம்
Mk stalin fb
சால்வைக்கு பதில் புத்தகங்கள் வழங்கிடுங்கள்... ஸ்டாலின் வேண்டுகோள்
Sachin
இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும்: சச்சின் நம்பிக்கை
Rubellaa edit
ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு
Tnveli
நெல்லை விசாரணை கைதி கொலை வழக்கில் ஒருவர் கைது
Trichy arrest
நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி சென்ற 13 பேர் கைது
Bike
பறக்கும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பிஎம்டபிள்யூ
Kamal-hc
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கமல் எதிர்ப்புக் குரல்
முக்கிய செய்திகள்