7 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்

சட்டப்பேரவையில் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து பதில் அளிக்க திமுக உறுப்பினர்கள் 7 பேருக்கு அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏக்கள் கு.க.செல்வம், மஸ்தான், முருகன் உள்ளிட்ட 7 பேர் விதிகளை மீறி செயல்பட்டதாக அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் புகார் தெரிவித்திருந்தார். இதன்பேரில், அந்த உறுப்பினர்களுக்கு அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 23ம் தேதிக்குள் புகார் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்