செய்திகள் உண்மை உடனுக்குடன்

43 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு: ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்தில் தகவல்

ஓ.பி.எஸ்க்கு 43 லட்சம் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அந்த அணியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள்தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என அதிமுகவின் இரு அணியினரும் கூறிவருகின்றனர். இது தொடர்பாக ஓ.பி.எஸ் - சசிகலா அணிகள் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்திற்கு இரு தரப்பினரும் உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் 6,000 பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் உறுதிப்பத்திரம் செய்துள்ளனர்.

மேலும் 60 லட்சம் பேர் உறுதிப்பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் அணியினர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இருதரப்பு உறுதிப்பத்திரங்களையும் ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்