செய்திகள் உண்மை உடனுக்குடன்

தேர்தல் ஆணையத்தில் சசிகலா நாளை பதில் கடிதம்

Sasikala

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனது குறித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் நாளை விளக்கக் கடிதம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தார். ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனுச் செய்தனர்.

இது தொடர்பாக பதிலளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் சசிகலா தரப்பில் நாளை பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இப்பிரச்னை குறித்து தீர்வு காண இரு தரப்பினரையும் நாளை மறுநாள் நேரில் வருமாறு தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது.

முக்கியச் செய்தி
Rajini 700 x 350
பாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு
Petrol l
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
Cm l
கனவு கானல் நீராகவே இருக்கும்: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
Kodanad arrest 700 x 350
கோடநாடு கொலை விவகாரம்: 4 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
Karunanidhi 700 x 350
கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: டிகேஎஸ் இளங்கோவன் தகவல்
Bus 700 x 350
தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது
Pope francis700
வடகொரியா-அமெரிக்கா இடையே அமைதி நிலவ வேண்டும் - போப் ஃபிரான்சிஸ்
Pooja l
வறட்சியில் தவிக்கும் தமிழக மக்கள்: மழை வேண்டி சிறப்பு யாகம்
Stalin 700 x 350
திரைப்படங்களை மிஞ்சும் த்ரில்லர் காட்சிகள்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
Hawala
டி.டி.வி.தினகரன் வழக்கு: ஹவாலா பணம் பறிமுதல்
முக்கிய செய்திகள்