பல கோடி ரூபாய் மோசடி: தீபா மீது திடுக் புகார்

Sasikalaaiadmk deepafake

பணம் வசூலித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெ. தீபா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா பேரவையை தொடங்கினார். இதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் புதிய கட்சி தொடங்குவதாக மாதவன் அறிவித்தார். இந்நிலையில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர், இன்று காலை தீபா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் விண்ணப்பப் படிவம் பெற, தீபா பணம் வசூலித்ததாகவும் பேரவை அங்கீகாரம் ரத்தானதை மறைத்து, தீபா பணம் வசூலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்