செய்திகள் உண்மை உடனுக்குடன்

சென்னை மாலில் சுற்றும் ரோபோ

சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் நவீன ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ரோபோ மூலம் எளிதான முறையில் பல்வேறு தகவல்களை பெற முடிவதாக வாடிக்கையாளர்களும், பார்வையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமாக கருதப்படுகிறது ரோபாடிக் தொழில்நுட்பம். அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் அதன் நிர்வாகத்தினர் “EA BOT” என்ற ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளனர். 5 அடி உயரத்தில் வணிக வளாகம் முழுவதும் சுற்றி வரும் இந்த ரோபோவில் வழிகாட்டல் கையேடு, கடைகளில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கிறது.

நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோவில், வரும் காலத்தில் மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களை இடம்பெற வைக்கும் திட்டத்தில் உள்ளனர் அதனை உருவாக்கிய குழுவினர். நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இக்காலத்தில் இதுபோன்ற புதுமையான படைப்புகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரோபோவைக் காண வணிக வளாகத்திற்கு வரும் குழந்தைகளும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

முக்கிய செய்திகள்