முகம் கவர்ச்சியாக இருக்க வேண்டுமா?

Sleeping

உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். எனவே தூக்கத்திற்காக பலர் படாதபாடு படுகின்றனர்.

வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என்று ஆய்வில் புதிய தகவல் தெரிய வந்துள்ளது.

சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயார்க் பலகலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஏழரை மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முகத்தை போட்டோ எடுத்தனர்.

அதே போன்று நான்கரை மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தூக்கத்தை தியாகம் செய்து ஸ்மார்போன், சமூக வலைதளங்களில் தற்போதைய இளைஞர்கள்நேரத்தை செலவிட்டு வருகின்றனர். முகம் கவர்ச்சியாக இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் சரியான அளவு தூக்கம் மிக முக்கியம் என்பது இந்த ஆய்வில் தெளிவாக தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்