மோனாலிசா புன்னகை மர்மம்: மகிழ்ச்சிதான் என்கிறது ஆய்வு

Mona lisa

உலக புகழ்பெற்ற மோனாலிசாவின் மர்மப் புன்னகையிலிருந்து மகிழ்ச்சியே வெளிப்படுவதாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஓவியர் லியோனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற மோனாலிசாவின் ஓவியத்தில், அவரது இதழ்களில் தவழ்வது சோகமா, புன்னகையா, மகிழ்ச்சியா என பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இதற்கு விடைதேடும் வகையில் ஜெர்மனியில் உள்ள ஃபிரீபர்க் பல்கலைக்கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அவரின் வாய்ப்பகுதி மட்டும் கம்ப்யூட்டர் மூலம் த‌த்ரூபமாக வரைந்து பலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் மோனாலிசா படம் என்று தெரியாமலேயே அவரது உதட்டிலிருந்து வெளிப்படுவது மகிழ்ச்சியே என கருத்து தெரிவித்துள்ளனர்.