செய்திகள் உண்மை உடனுக்குடன்

சீர்திருத்தங்களுக்கு அரசியல் முட்டுக்கட்டை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கவலை

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது அரசியல் முட்டுக்கட்டை ஏற்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ‘உலகப் பொருளாதாரத்தில் இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசியபோது இதை அவர் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், வங்கிகளின் நிலைமை சீர்செய்வதும் அவசியமா‌கிறது என்றும் ராஜன் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பற்றாக்குறையால் ஏற்பட்ட‌ வறட்சி, சர்வதேச சந்தையில் மந்தநிலை ஆகியவற்றுக்கு இடையிலும் இந்தியா ஏழரை சதவிகித வளர்ச்சி கண்டு வருவதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

மேலும் சீர்திருத்தங்களைச் செய்தால் வளர்ச்சி வேகம் பெறும் என்று கூறிய அவர், அரசியல்ரீதியாக அதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.