பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புதிய தலைமைச் செயல் அதிகாரி..!

Kalyan krishnamurthy

பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கல்யாண் கிருஷ்ணமூர்த்தி பிலிப்பைன்ஸில் உள்ள ஏசியன் மேலாண்மையியல் கல்வி மையம் மற்றும் அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள யுஐயுசி மையத்தில் நிர்வாகவியலில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றவர்.

இவர் இதற்கு முன்பு அந்நிறுவனத்தின் டிசைன் மற்றும் வகைகள் பிரிவுக்கான தலைமைப் பொறுப்பில் இருந்தவர். பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பின்னி பன்சால் பதவியிலிருந்து ஒய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைச் செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.