செய்திகள் உண்மை உடனுக்குடன்

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்தால் அபராதம்

Currency

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பண‌ப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ‌ம‌த்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா எச்சரித்துள்ளார்.

வரு‌ம் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரும் எ‌ன்றும் அவர் தெரிவி‌த்தா‌ர். உதார‌ணமாக ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் ஒருவர் 4 லட்சம் ரூபாயை ரொக்கமாக கைமாற்றினால், அதை பெறுபவர் மொத்த தொகையையும் அபராதமாக செலுத்த வேண்டுமென விளக்கினார். 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணப்பரிமாற்றங்களுக்கு பான் எண் குறிப்பிட வேண்டும் என்ற விதி தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். கறுப்பு பணத்தை கட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.