செய்திகள் உண்மை உடனுக்குடன்

பா.ஜ.க வெற்றி: பங்குச் சந்தைகள் உயர வாய்ப்பு

Share l

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள கணிசமான வெற்றியால், பங்குச் சந்தைகள் வரும் நாட்களில் உயரும் என்று பங்கு வணிக நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.

குறிப்பாக, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள பெரும் வெற்றியால் பொருளாதார சீர்திருத்தங்கள் வேகம் பெறும் என தொழில் துறை தரப்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும், முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்கு வணிகத்தில் ஈடுபட இது சரியான தருணம் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.