செய்திகள் உண்மை உடனுக்குடன்

கார் சந்தையில் இந்தியா 3ஆவது இடம் பிடிக்கும்: சுசூகி நிறுவனம் நம்பிக்கை

உலகின் 3வது மிகப்பெரிய கார் சந்தையாக வரும் 2020ம் ஆண்டில் இந்தியா உருவெடுக்கும் என சுசூகி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் சர்வதேச கார் கண்காட்சியில் சுசூகி மோட்டார் நிறுவன உயரதிகாரி கிஞ்சி சைட்டோ இதனை தெரிவித்தார். இந்திய பயணிகள் கார் சந்தையில் 50 சதவீத பங்குகளை வைத்துள்ள மாருதி சுசூகி நிறுவனம் குஜராத்தில் புதிய உற்பத்தி மையத்தினை சமீபத்தில் தொடங்கியது. இந்த உற்பத்தி மையத்தின் உற்பத்தி திறனை 20 லட்சம் கார்கள் என்ற அளவில் வரும் 2020ம் ஆண்டில் உயர்த்த மாருதி சுசூகி திட்டமிட்டிருப்பதாகவும் கிஞ்சி சைட்டோ தெரிவித்தார். இந்தியாவில் மாருதி நிறுவனத்துடன் இணைந்து தங்கள் நிறுவனம், 50 சதவிகித சந்தை பங்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.