செய்திகள் உண்மை உடனுக்குடன்

வோடாஃபோன் நிறுவனத்துடன் இணையும் ஐடியா

வோடா‌ஃபோன் நிறுவனத்துடன் ஐடியா செல்ஃபோன் நிறுவனம் விரைவில் இணைய உள்ளது.

இதற்கான ஒப்புதலை மும்பையில் இன்று கூடிய ‌ஐடியா நிறுவன இயக்குனர்கள் வாரியம் அளித்தது. ஐடியாவும் வோடாஃபோனும் இணைந்தபின், அது இந்தியாவின் மிகப்பெரிய செல்ஃபோன் சேவை நிறுவனமாக உருவெடுக்கும். முன்னதாக ஏர்செல் நிறுவனத்தை வாங்க, அனில் அம்பா‌னியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறு‌வனத்தின் அதிரடிக்குப் பின்னர் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்