சென்னை நங்கநல்லூர் தபால்பெட்டியில் 51 பாஸ்போர்ட்: சிபிஐ விசாரணை

சென்னை நங்கநல்லூரில் தபால் பெட்டிக்குள் இருந்து மேலும் சில பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதோடு‌ சேர்த்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து தபால் நிலைய அதிகாரி அமிர்தலிங்கம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். ‌பாஸ்போர்ட்டில் உள்ள முகவரிகளை வைத்து 10 பேருக்கு, விசாரணைக்கு வருமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும் பாஸ்போர்ட்களில் கிடைத்த விவரங்களை கொண்டு மகாராஷ்ட்ரா மாநில போலீசாரிடமும் த‌ஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்ட போலீசாரிடமும் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாஸ்போர்ட் மத்‌திய அரசு சார்ந்த விவகாரம் என்பதால் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை‌ நடத்தி வருகின்றனர்.