செய்திகள் உண்மை உடனுக்குடன்

சுவாதி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சுவாதி கொலை வழக்கில், முகநூல் மூலம் சுவாதியோடு தொடர்பு கொண்ட வேறு சில நபர்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த ஐயங்களுக்கு விடை சொல்லும் வகையில் தமிழக அரசு சுவாதி படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.