பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு: தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதிக்கு முன்ஜாமீன்

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதிக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்த‌ரவிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு எதிராக போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்தசாரதி தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு வந்ததபோது அவருக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி கல்யாண சுந்‌தரம் உத்தரவிட்டார்.