மணிரத்னம் படத்தில் இருந்து விலகினேனா?: நடிகை சாய் பல்லவி விளக்கம்

Sai pallavi

மணிரத்னம் இயக்கம் புதிய படத்தில் இருந்து நானாக விலகவில்லை என்று பிரேமம் புகழ் நடிகை சாய்பல்லவி விளக்கம் அளித்துள்ளார்.

ஓ காதல் கண்மணி வெற்றிக்குப் பின்னர், தனது அடுத்த படத்தையும் காதலை மையப்படுத்தி எடுக்க இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். இதற்காக கார்த்தி, துல்கர் சல்மான் ஆகிய 2 ஹீரோக்களுடன் களம் இறங்கியுள்ள மணி ரத்னம், ஹீரோயினாக பிரேமம் மலர் புகழ் சாய்பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த படத்தில் இருந்து நடிகை சாய்பல்லவி விலகிக் கொண்டதாகவும் ஒரு தகவல் பரவியது.

இந்த தகவலை மறுத்துள்ள நடிகை சாய்பல்லவி, மணிரத்தினம் போன்ற மிகப்பெரிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அவரது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. சில காரணங்களுக்காக படத்தில் நான் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். இது இயக்குனரின் விருப்பமே தவிர,எனது விருப்பம் அதுவல்ல. ரசிகர்களாகிய உங்களைப் போல, அவரது படத்தை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னமும் பெயர் சூட்டப்படாத அந்த படத்தில் நாயகியாக பாலிவுட் ஹீரோயின் ஆதித்யாராவ் ஹைதாரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.