ஹன்சிகாவின் ஓவியம்!

Hansika

நடிகை என்பதைத் தாண்டி ஹன்சிகா ஒரு நல்ல ஓவியரும்கூட. படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவது அவரது விருப்பம். அறையை நிரப்பும் அளவுக்கு ஓவியங்களாக குவிந்திருக்கிறார். அவற்றை ஏலம்விட ஹன்சிகா தீர்மானித்துள்ளார். இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையை தான் தத்தெடுத்திருக்கும் இரண்டு டஜன் குழந்தைகளின் நலனுக்காக செலவிடப் போகிறாராம். ஓவியம் அழகாக இல்லாவிட்டாலும், அதற்குப் பின்னே உள்ள நோக்கத்துக்காவது ஏலம் எடுக்கலாம்.