தமிழில் மீண்டும் பிஸியான மாதவன்

Madhavan fb

சாக்லேட் பையனாக தமிழுக்கு அறிமுகமான மாதவன், நீண்ட இடைவேளைக்கு பின்னர் இறுதிச்சுற்று படம் மூலம் தமிழுக்கு வந்தார்.

அந்த படத்திற்கு பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை விஜய் இயக்குகிறார் . இதனிடையே அதற்கு முன்னதாக களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணத்தின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.