செய்திகள் உண்மை உடனுக்குடன்

நீர்நிலையை ஆக்கிரமித்ததாக வழக்கு... நடிகர் மாதவன் நேரில் ஆஜராக உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கில் நடிகர் மாதவன் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியில் ராஜவாய்க்கால் என்ற நீர்நிலையை, நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளதாக கணேசன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மழைக்காலம் தொடங்கவுள்ளதால், ராஜவாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ராம் மோகனராவ், சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நடிகர் மாதவன் அல்லது அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 8ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.