இன்று 25வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய ஹன்சிகா

Hansika

தமிழில் முன்னணி நாயகியாக இருக்கும் பப்ளி ஹன்சிகா இன்று தனது 25வது பிறந்த நாள் தினத்தை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இன்று 25வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹன்சிகா, தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றார் . தற்போது ஹன்சிகாவிடம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். மேலும் இவர் பல சமூக சேவைகளை ரகசியமாக செய்துவருவது குறிப்பிடத்தக்கது.