செய்திகள் உண்மை உடனுக்குடன்

பாகுபலி-2 படத்துக்காக நான்குவிதமான கிளைமேக்ஸ் காட்சிகள்

Bahubali

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளியாகி ஹிட் அடித்த படம் பாகுபலி. இந்திய சினிமா வரலாற்றில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படங்கள் வரிசையில் முக்கிய இடம் இந்த படத்துக்கு உண்டு என்று விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது.

முதல் பாகத்தில் எழுந்த கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன் என்ற கேள்விக்குப் பதில் அடுத்த ஆண்டு வெளியாகும் பாகுபலி-2 ஆம் பாகத்தில் இருக்கும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. இந்த கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் 4 விதாமான கிளைமேக்ஸ் காட்சிகளை ராஜமவுலி ஷூட் செய்து வைத்துள்ளதாகவும், அதில் எந்த காட்சியைப் படத்தில் இணைப்பது என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் ரகசியமாகப் படமாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மில்லியன் டாலர் கேள்வியாக மாறிவிட்ட பாகுபலியைக் கட்டப்பா கொன்றதற்கான பதில், ராஜமவுலி, பாகுபலி படத்தின் கதாசிரியர் மற்றும் பிரபாஸ், ராணா ஆகியோரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் கூறப்படுகிறது.