செய்திகள் உண்மை உடனுக்குடன்

அடுத்தடுத்த வாய்ப்புகளுடன் மாதவன்!!!

Madhavan

நீண்டகால இடைவெளிக்கு பின் தமிழில் ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் வலம் வந்த மாதவன் தற்போது புது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கும் மலையாள சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க மாதவன் ஒப்புக் கொண்டார். மேலும் சற்குணத்தின் அடுத்தப் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் மாதவன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ‘கிராமஃபோன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் சிறப்பான வேடத்தில் களம் இறங்குவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு!