செய்திகள் உண்மை உடனுக்குடன்

கோபத்தில் ஹன்சிகா !

Handsika fb

அரண்மனை-2 வெற்றியுடன், போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் சின்னக் குஷ்பு ஹன்சிகா.

வந்தவரிடம் நிருபர்கள் கேள்வித் தூண்டில் போட லாவகமாக தப்பி வர ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடிக்கிறீர்களாமே?’ எனக் கேட்டதும் ஜெர்க்காகி விட்டார்.

வெள்ளாவி பெண்ணின் முகம் கோவைப்பழமாய் சிவந்து விட்டது. ’இதெல்லாம் யார் சொல்கிறார்கள்? அப்படி ஏதும் நான் நடிக்கவில்லை, நோ கமெண்ட்ஸ்’ எனக் கோபத்தில் கொந்தளித்து விட்டார் ஹன்சிகா.

நயன்தாரா வழியை ஃபாளோ பண்ணமாட்டாராமோ..?