செய்திகள் உண்மை உடனுக்குடன்

’பலே வெள்ளையத் தேவா’ மூலம் பாதையை மாற்றும் சசிக்குமார்

Sasikumar2

இயக்குனர் சசிக்குமார் நடிக்கும் பலே வெள்ளையத் தேவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஆக்‌ஷன் படங்களில் இருந்து விலகி முழுநீள காமெடி பாதைக்குத் தயாராகியுள்ள இயக்குனர் சசிக்குமார், அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கும் பலே வெள்ளையத் தேவா படத்தில் நடித்து வருகிறார். சசிக்குமாரின் கம்பெனி புரடக்‌ஷன்ஸ் நிறுவனமே இந்த படத்தைத் தயாரித்து வருகிறது. காமெடி பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள சசிக்குமார், பலே வெள்ளையத் தேவா படத்துக்காக கோவை சரளாவுடன் கைகோர்த்துள்ளார். சத்தமில்லாமல் கடந்த செப்டம்பர் மாதமே பலே வெள்ளையத் தேவா படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டதாகவும், படம் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.