செய்திகள் உண்மை உடனுக்குடன்

’பலே வெள்ளையத்தேவா’ படப்பிடிப்பை 50 நாட்களில் முடித்த சசிக்குமார்

Balle

சசிக்குமார் நடிக்கும் ‘பலே வெள்ளையத்தேவா’ படபிடிப்பு 50 நாட்களில் முடிந்தது.

புதுமுக இயக்குனர் சோலைபிரகாஷ் இயக்கியுள்ள பலே வெள்ளையத்தேவா படம் மூலம் ஆக்‌ஷன் பாதையை விட்டு காமெடி பாதைக்கு சசிக்குமார் மாறியுள்ளார். அவரின் சொந்த நிறுவனமான கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், கோவை சரளா, சங்கிலிமுருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேனியில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு 50 நாட்களில் முடிவுற்றது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகுமார் பதிவிட்டுள்ளார். வித்தியாசமான கதையுடன் காமெடி கலந்து உருவாகும் ‘பலே வெள்ளையத்தேவா’ படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.