விஜய் சேதுபதி- மாதவன் இணையும் 'விக்ரம் வேதா'வின் படப்பிடிப்பு துவக்கம்

Vikram vedadha l

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் விக்ரம் வேதா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கும் இப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும் கலக்க வருகிறார்கள் என கூறப்படுகிறது. முழுக்க முழுக்க அதிரடி திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் நடிகை வரலட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.