கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் ’பலே வெள்ளையத் தேவா’

Bv

சசிக்குமாரின் பலே வெள்ளையத் தேவா படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

ஆக்‌ஷன் படங்களில் இருந்து விலகி முழுநீள காமெடி பாதைக்கு திரும்பியுள்ள சசிக்குமார், சோலை பிரகாஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் பலே வெள்ளையத் தேவா. இந்த படத்தில் கோவை சரளாவுக்கு இணையாக காமெடியில் சசிக்குமார் கலக்கி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒரே ஷெட்யூலில் எடுத்து முடிக்கப்பட்ட இந்த படத்தில் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடும் படக்குழு, பாடல்களை வரும் 5ம் தேதி வெளியிடுகிறது. கம்பெனி புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தை, கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.