செய்திகள் உண்மை உடனுக்குடன்

தாத்தாவானார் விஜய் சேதுபதி..!

Index

வித்தியாசமான கதைகளங்களில் நடித்து அதில் வெற்றியை நிலைநாட்டுபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் படம் விக்ரம் வேதா.

புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மாதவன், கதிர், ஸ்ரீ நாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் வித்தியாசமான கெட்டப்பில் கலக்கிய விஜய் சேதுபதி இப்படத்தில் தாத்தாவாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ் புத்தாண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் வேதா படத்தில் மாதவன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ்காரராக நடித்துள்ளார்.