செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஃப்லிம் பேர் விருது பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் நடிகர்

Filmfare award

இந்தியாவில் வழங்கப்படும் ஃபிலிம் பேர் விருதுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்திவரும் நிலையில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஃபிலிம் பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை ஒருசாரர் எதிர்த்துள்ளனர்.

பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஃபிலிம் பேர் விருதுக்கு பாவத் கான் என்ற பாகிஸ்தான் நடிகர் ‘கபூர் அண்ட் சன்ஸ்’ படத்தில் நடித்ததற்காக தேர்வாகியுள்ளார். இதேபோல் ராகத் ஃபாத் அலி கான் மற்றும் அடிஃப் அஸ்லாம் ஆகிய இரு பாடகர்களும் தேர்வாகியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சாய்னா என்சி, காஷ்மீர் விவகாரம், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் போன்றவற்றால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தானை சர்வதேச அளவில் தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்திவரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஃபிலிம் பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை தான் எதிர்பார்க்கவில்லை என்றார்.