செய்திகள் உண்மை உடனுக்குடன்

புரியாத புதிர் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை

Vjs

விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளிவராது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் புதுமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் புரியாத புதிர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி இப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படம் பொங்கலுக்கு வெளிவராது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே படவெளியிடு பல முறை தள்ளிப்போன நிலையில் மீண்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்பட்டுள்ளது விஜய் சேதுபதி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் தள்ளிப்போனதற்கு படக்குழு தரப்பில் காராணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

விஜய் சேதுபதியின் புரியாத புதிர் திரைப்படம் வெளிவராத நிலையில், விஜய்யின் பைரவா, சாந்தனு நடிப்பில் கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்த பொங்கலுக்கு வெளிவரவுள்ளது.