இந்தியாவுக்கு வரும் 'மூன்லைட்'..!

Moonlight l

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஹாலிவுட் படமான மூன்லைட் அடுத்த மாதம் இந்திய திரையரங்குகளில் ஜொலிக்க வருகிறது.

திரிவண்டே ரோட்ஸ் அண்ரே நடித்துள்ள இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். பிப்ரவரி 17-ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் களம் காணும் இப்படம் ‘மூன்லைட் பிளாக் பாய்ஸ் லூக் ப்ளூ’ என்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இளம் நாயகன் தான் யார் என்று கண்டுபிடிக்க போராடுவதே இப்படத்தின் கதையம்சமாக உள்ளது. வாழ்வில் இளம் நாயகன் தான் அனுபவிக்கும் தனிமை, இன்பம், அதிகப்படியான வலி, காதலில் விழுவது, தனக்கு ஏற்பட்டுள்ள பாலின ஈர்ப்புகளை அறிந்துகொள்ள விளைவது உள்ளிட்ட கதையம்சத்துடன் படம் வருகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் ரீலிஸ் ஆன இப்படம் உலகளவில் 160 லட்சம் அமெரிக்க டாலரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.