நடிகர் சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்ட பீட்டா

Surya-peta

விலங்குகள் நல அமைப்பான பீட்டா, நடிகர் சூர்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகள், தனது சி3 படத்தை புரமோட் செய்யவே என்று பீட்டா அமைப்பு குற்றம் சாட்டியது. இதையடுத்து பீட்டா அமைப்புக்கு பதிலளித்து சூர்யா தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதில், நடிகர் சூர்யா குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோராவிடில், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பீட்டா அமைப்பு சார்பில் நடிகர் சூர்யாவிடன் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் வாயிலாக சூர்யாவுக்கு பீட்டா சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்து சி3 படத்தின் விளம்பரத்துக்காகவே என்று கூறியதற்கு மன்னிப்பு கோருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட சில வீடியோ ஆவணங்கள் குறித்த தகவல்களையும் பீட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.