ஹன்சிகாவை புகழும் டி.ஆர்!

Hansi

ஹன்சிகாவும், டி.ராஜேந்தரும் ஒரே மேடையில் இருந்தால் பரபரப்பு பற்றிக்கொள்ளாதா..?

ஒரு காலத்தில் அவர் வீட்டுக்கு விளக்கேற்றப் போகும் குடும்ப தீக்குச்சி இவர்தான் என்றல்லவா இருந்தது சூழல்! நல்லவேளை... அந்த மேடையில் டி.ஆரை பார்த்து கையெடுத்து கும்பிட்டார் ஹன்சிகா.

டி.ஆர் பேசும்போது, “வாலு படத்தை நானே பல கோடி கொடுத்து வாங்கி கஷ்டப்பட்டு ரிலீஸ் செஞ்சேன். அப்போ ஒரு பாடல் மட்டும் பாக்கி. வந்து ஆடணும்னு கேட்டப்போ, எவ்வித மறுப்பும் சொல்லாமல் வந்து ஆடினார் ஹன்சிகா. அவ்வளவு நல்ல பொண்ணு” என்று புகழ்ந்தார் டி.ஆர்!.