செய்திகள் உண்மை உடனுக்குடன்

விருதுக்கு தேர்வான 'ஒரு நாள் கூத்து'

Oru naal koothu 700 x 350

லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதின் இறுதி சுற்றுக்கு ஒரு நாள் கூத்து திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நிவேதா பெதுராஜ், மியா ஜார்ஜ், ரித்விகா, தினேஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ள ஒரு நாள் கூத்து கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியானது. அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் சினிஃபெஸ்ட் விருதுக்கான இறுதி சுற்றுக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் குறித்த இன்றைய இளைஞர்களின் பார்வை மற்றும் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களை எடுத்துக் கூறியிருக்கும், இப்படத்தின் கதை மட்டுமல்லாது பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இப்படத்தின் அடியே அழகே பாடலை கண்டு ரசிக்காதவர் யாரும் இல்லை என்றே கூறலாம். ஒரு நாள் கூத்து பெண்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் படமாக அமைந்தது என திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை பற்றி விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் முதன்முறையாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.