டோரா படத்தின் டீசர் வெளியீடு..!

Dora

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள டோரா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள டோரா படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விவேக் - மெர்வின் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். டோராவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக “எங்க போர டோரா” பாடலின் சிங்கில் ட்ராக் செம ஹிட்டானது. இந்நிலையில், படத்தின் டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.