குரு சிஷ்யன் உறவில் விரிசல்... பாலாவுக்கு எதிராக அமீரிடம் சென்ற சசிக்குமார்?

Bala sasi kumar

குரு பாலாவும், அவரது சிஷ்யர் சசிக்குமாரும் இணைந்து தயாரித்த படம் தாரை தப்பட்டை. இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் சரிவரப் போகவில்லையாம். படத்தை லைக்கா மற்றும் ஐங்கரன் நிறுவனத்திற்கு பெரும் விலைக்கு விற்றுவிட்டாராம் பாலா. இதனிடையே லாபத்தின் பங்கு சசிக்குமாருக்கு வரவில்லையாம்.

தனக்கு வரவேண்டிய பங்கை கேட்டுகேட்டு பார்த்து கிடைக்காத நிலையில், சலித்துப் போன சசிக்குமார், இயக்குனர் அமீரிடம் சென்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினாராம் . இதையடுத்து ஆறுதல் கூறிய அமீர், சசிக்குமாருடன் இணைந்து லாபத்தின் பங்கை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.