செய்திகள் உண்மை உடனுக்குடன்

'விக்ரம் வேதா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Vikram vedha

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார். சசிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஷரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். கேங்க்ஸ்டார் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள விக்ரம் வேதா படத்தின் டீசர் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.