அஜித் வேடத்தில் பவன்கல்யாண்... ஆனால் பெப்பர் சால்ட் இல்லை

700-350-veeram

அஜித் நடித்து கோலிவுட் ரசிகர்களை கலக்கிய வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் மார்ச் 24-ல் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அஜீத் வேடத்தில் நடித்துள்ள பவன் கல்யாண் பெப்பர் சால்ட் இல்லாமல் இளமையாக வருகிறாராம்.

சிவா இயக்கத்தில் அஜித் தமன்னா மற்றும் பலர் நடித்து வெளியான படம் வீரம். இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிக்க “கட்டமராயுடு” என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். தமிழில் வெளியான வீரத்தில் அஜித் நரைத்த முடியுடன் நடித்திருந்தார். ஆனால் தெலுங்கில் பவன் கல்யாண் அப்படியெல்லாம் நடிக்கவில்லையாம். மிக இளமையான தோற்றத்தில் வருகிறாராம். கட்டமராயுடு படம் தமிழ்நாட்டிலும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கிஷோர் குமார் இயக்கியுள்ளார்.