செய்திகள் உண்மை உடனுக்குடன்

மீண்டும் தாக்கப்பட்டது ‘பத்மாவதி’படத்தின் செட்

Padmavati

கோலாப்பூரில் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் சஞ்சய்லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் செட் மீண்டும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் பத்மாவதி. இந்தப் படம் ராணி பத்மினி கதையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுத் திரைப்படம். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை அடைய அவரது நாட்டின் மீது படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் அலாவுதின் கில்ஜிக்கும் ராணி பத்மினிக்கும் சில பாடல் காட்சிகள் இருப்பதாக வந்த தகவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு தளம் தாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் செட் ஜெய்ப்பூரில் தாக்கப்பட்டபோது இயக்குனர் பன்சாலியும் தாக்கப்பட்டார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. அங்கு அமைக்கப்பட்டுள்ள செட்யையும் அடையாளம் தெரியாத நபர்கள் தற்போது கபளீகரம் செய்துள்ளனர்.

பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்.