செய்திகள் உண்மை உடனுக்குடன்

அப்பாடா... முடிவுக்கு வந்தது நயன்தாரா பட பஞ்சாயத்து

Dora 700 x 350

நயன்தாரா, தம்பிராமையா, ஹரீஷ் உத்தமன் நடிப்பில் சற்குணம் அசிஸ்டெண்ட் தாஸ் ராமசாமி இயக்கியிருக்கும் படம், ’டோரா’. இந்தப் படத்தில் கார் முக்கிய கேரக்டரில் வருகிறது.

காரை முக்கியமாகக் கொண்ட கதை என்பதால், உதவி இயக்குனர் ஸ்ரீதர் என்பவர், ‘அலிபாபாவும் அற்புத காரும் என்ற டைட்டிலில் ஒரு கதையை உருவாக்கி இருந்தேன். அதை திருடிதான் டோரா படத்தை எடுத்துள்ளனர்’ என்று புகார் கூறியிருந்தார். பஞ்சாயத்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்குச் சென்றது. தாஸ் ராமசாமி எழுத்தாளர் சங்கத்தில் கதையை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார். சங்க நிர்வாகிகள், இரண்டு பேரிடமும் தனித் தனியாக கதையைக் கேட்டனர். பிறகு இரண்டும் வெவ்வேறு கதை என்று கூறியதையடுத்து பஞ்சாயத்து முடித்து வைக்கப்பட்டது. பிரச்னை முடிந்ததால் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.